14 கேமராவில் படமான மட்டி

3 years ago 713

மண் சாலை பந்தயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள, ‛மட்டி' படம், டிச. 10ல் தியேட்டரில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் பிரகபல் இயக்க, யுவன், ரிதான் கிருஷ்ணா நடிகர்களாக அறிமுகமாகின்றனர். ஹாலிவ்டில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்ய, சன்லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். கே.ஜி.எப்., படப்புகழ், ரவி பசுருர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் வெளியாகிறது.

இயக்குனர் கூறியதாவது: பைக் ரேஸ் பற்றி நிறைய படம் வந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக மண் சாலையில் நடக்கும் பந்தயத்தை மையமாக கொண்ட முதல் படமிது. 14 கேமராவை வைத்து படமாக்கினோம். நாயகன் தவிர நிஜ மட்ரேஸர்ஸ் நடித்துள்ளனர். நாயகனும் 2 ஆண்டு பயிற்சி எடுத்தார். எந்த ஒரு டூப்பும் இல்லை. நிறைய ஓ.டி.டி.,யில் கேட்டனர், ஆனால் படத்தின் பிரம்மாண்டத்தை தியேட்டரில் ரசிகர்கள் காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article