போபால்-''நான் கபடி ஆடுவதை படம் எடுத்தவர் ஒரு ராவணன்: அவரின் அடுத்த பிறப்பு பாழாகும்,'' என, பா.ஜ., - எம்.பி., பிரக்யா தாக்குர் சாபம் கொடுத்துஉள்ளார்.
குற்றச்சாட்டு
மஹாராஷ்டிராவின் மாலேகானில், 2008ல் இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கில் கைதான, பா.ஜ.,வைச் சேர்ந்த பிரக்யா தாக்குர், உடல்நலக் குறைவை காரணம் காட்டி ஜாமின் பெற்றார்.இந்நிலையில், சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள காளி கோவிலுக்கு சென்ற பிரக்யா, அங்கு பெண்களுடன் உற்சாகமாக கபடி விளையாடினார். இந்த 'வீடியோ' வெளியாகி, பிரக்யாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக் குறைவு என பொய் கூறி, பிரக்யா ஜாமின் பெற்றதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், போபாலில் நடந்த தசரா விழாவில் பிரக்யா பேசியதாவது:காளி கோவிலுக்குச் சென்ற போது, அங்கு விளையாடிய சிலர், கபடி போட்டியை துவக்கி வைக்கும்படி அன்புடன் அழைத்தனர். அதன்படி நான் அடியெடுத்து துவக்கி வைத்த சில வினாடி காட்சியை ஒருவர் படமெடுத்து பரப்பியுள்ளார். என் விளையாட்டு அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால் இதை செய்துள்ளார்.
தவ வாழ்வு
அவர் ஒரு ராவணன். கலாசார சீரழிவு பாவத்தை அவர் போக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் இறுதிக் காலத்தில் துன்பப்படுவார். தேச பக்தர்கள், புரட்சியாளர்கள் மட்டுமின்றி அவர்களை விட மேலான சாதுக்களுடன் மோதுவோர், அது ராவணனாக இருந்தாலும், கம்சனாக இருந்தாலும், வாழ்ந்ததாக வரலாறு இல்லை. பொதுமக்களுக்காக நான் தவ வாழ்வு வாழ்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே பிரக்யாவின் மூத்த சகோதரி உப்மா தாக்குர் கூறும்போது, ''மஹா., போலீசார் விசாரணையின் போது பிரக்யாவை துாக்கி வீசியதால், அவரின் தண்டுவடம் இடம் பெயர்ந்துள்ளது. ''இதனால் எந்த நேரத்தில் வலி வரும் என தெரியாத நிலையில் அவர் உள்ளார்,'' என்றார்.
Advertisement
வாசகர் கருத்து (11)
- புதியவை
- பழையவை
- அதிகம் விவாதிக்கப்பட்டவை
- மிக மிக தரமானவை
- மிக தரமானவை
- தரமானவை
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.