இந்தியா
Published : 17,Oct 2021 11:07 AM
'வெளியே' வந்தபின் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவப்போவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியிடம் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார் ஆர்யன் கான்.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மும்பையில் உள்ள பலத்த பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர் சல்மான்கானை சிறையில் இருந்து வெளியில் எடுத்த மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் ஆர்யனுக்காக வாதாடி வருகிறார். எனவே வரும் 20ம் தேதி எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆர்யன் கான் இருக்கிறார்.
இந்நிலையில் விசாரணையின்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவிடம், தான் விடுதலையான பிறகு ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவப்போவதாக ஆர்யன் கான் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. தாங்கள் என்னைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒன்றைச் செய்வேன் என்றும் ஏழை, அடித்தட்டு மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக எதையாவது செய்வேன் என்றும் எதிர்காலத்தில் தனது பெயரை கெடுக்கும்விதமாக எதையும் செய்ய மாட்டேன் என்றும் அதிகாரி சமீர் வான்கடேவிடம் ஆர்யன் கான் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved