இந்தியா
Published : 17,Oct 2021 11:47 AM
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தில் 72 கிலோ எடையில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் புவனேஸ்வரைச் சேர்ந்த கேக் தயாரிப்பாளர் உருவாக்கியுள்ள இந்த சாக்லேட் கேக்கில், நவீன் பட்நாயக் பயன்படுத்தும் கோல்ஃப் மட்டை மற்றும் பந்தும் இடம்பெற்றுள்ளது. ஒடிசாவில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளக் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக், 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
ஒலிம்பிக் போட்டியில் ஒடிசாவில் பயிற்சி பெற்ற பல வீரர், வீராங்கனைகளை மற்றும் ஹாக்கி அணி பதக்கங்களை குவித்தனர். இதனால் நவீன் பட்நாயக் இந்தியா முழுக்க உள்ள விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், மாணவர்களின் சிறப்பான பாராட்டை பெற்றுள்ளார் என்பதால் இந்த பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.oo
இதனைப்படிக்க...இனி குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved