'A DAY' கொரியன் படத்தின் கதைதான் ’மாநாடு’? - புதிய சர்ச்சையில் சிம்புவின் படம்

3 years ago 733

Puthiyathalaimurai-logo

சினிமா

15,Oct 2021 05:34 PM

Is-Simbu-s-Manadu-movie-story-is-Korean-movie-s-A-Day

சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் கதை ஒரு கொரியன் திரைப்படத்தின் கதை என சர்ச்சை எழுந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்திருக்கும் மாநாடு திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. Time Loop முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் மாநாடு படத்தின் கதை 2017ஆம் ஆண்டு Cho Sun Ho இயக்கத்தில் வெளியான A Day என்ற கொரியன் படத்துடையது என சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தின் ட்ரைலரில் இடம்பெறும் காட்சிகளும் A Day படத்தின் காட்சிகளும் ஒத்துப்போவதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி: 'என்னையா டெனட் படம் மாதிரி போட்டு குழப்புற?' - வெளியானது மாநாடு டிரெய்லர்!

image

கொரிய படக்குழுவினர் மாநாடு தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், திரைத்துறையினர் கூறுகின்றனர். இதனால் மாநாடு படத்தில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article