பெலகாவி-துஷ்ட சக்தியை, சம்ஹாரம் செய்ததன், அடையாளமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கொரோனா தொற்றினால், மாநில மக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் பிரார்த்தனை செய்யும் வகையில், கர்நாடகாவின் அனைத்து கோவில்களிலும், அரசு சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது.பெலகாவியில் அமைச்சர் சசிகலா ஜொல்லே நேற்று கூறியதாவது:கொரோனாவால், இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அனுபவித்தனர். நம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், வீட்டிலேயே இருக்கும்படி ஆனது.தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல், பாதுகாக்கும்படி எல்லம்மா தேவியிடம் வேண்டினேன்.மாநிலத்தின் அனைத்து கோவில்களிலும், பக்தர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்படும். ஆன்மிக சூழ்நிலை ஏற்படுத்தப்படும். நான் அமைச்சரான பின், துறையில் பல முன்னேற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement