மகிழ்ச்சி
தினமும், வீரராகவர் கோவிலுக்கு சென்று வழிபடுவேன். கொரோனா தொற்று காரணமாக, வார இறுதி நாட்களில், பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை செய்யப்பட்டதால் ஏமாற்றமாக இருந்தது. இந்த நிலையில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியும், மன நிம்மதியும் அளிக்கிறது.ஏ.சத்யா, 28, கொப்பூர், திருவள்ளூர்.
மன நிறைவு
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மேலும் தளர்த்தி, வாரத்தின் அனைத்து நாட்களிலும், கோவில்கள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது, நல்ல முடிவு. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். விஜயதசமி நாளில், செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வந்தது மன நிறைவு அளிக்கிறது. எஸ்.மன்னார், 50, செங்கல்பட்டு.
வரவேற்பு
கொரோனா ஊரடங்கில், தமிழக அரசு தளர்வு ஏற்படுத்தி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், கோவில்களில் அர்ச்சனை செய்ய மறுக்கப்படுகிறது. திருமண நாள், பிறந்தநாள், நேர்த்திக்கடன், பரிகாரம் என கோவிலுக்கு சென்றால், கோவிலில் அர்ச்சனை செய்ய மறுக்கப்படுகிறது. எனவே, அர்ச்சனை செய்து வழிபடவும் அரசு அனுமதி வழங்க வேண்டும்.எம்.பிரவீன்குமார், 41காஞ்சிபுரம்.
Advertisement