உலகம்
Published : 09,Oct 2021 04:24 PM
அமெரிக்காவில் உள்ள ஒரு மெக்டொனால்டில் காபி வருவதற்கு தாமதமானதால் அங்கிருந்த ட்ரேக்கள் மற்றும் டேபிள் மார்க்கர்களை ஒரு பெண் தூக்கி எறிந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.
உணவு சாப்பிடச்செல்லும்போது ஹோட்டல்கள்மீது பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் கோபப்படுவது வழக்கமான ஒன்று. அனைத்து இடங்களிலும் இது சகஜமாக நடக்கக்கூடியதுதான். சமீபத்தில் அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தில் உள்ள மெக்டொனால்டில் காபி குடிக்கச் சென்ற பெண் கோபப்பட்டு ட்ரேக்கள் மற்றும் டேபிள் மார்க்கர்களை எடுத்து தரையில் போட்ட சம்பவம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
Karen Trashes McDonald’s because Her Coffee Took too Long pic.twitter.com/qi0V0MG2mk
— Karen (@crazykarens) October 4, 2021காபி வருவதற்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த அந்த பெண் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தொழிலில் கவனமாக இருக்கச்சொல்லி எச்சரித்தது (to be more professional) அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. மேலும் ஆத்திரமடைந்த அந்த பெண் ட்ரேக்களை கீழே எடுத்து தரையில் போட்டதுடன் டேபிள் மார்க்கர்களையும் கீழே தள்ளிவிட்டு செல்கிறார். போலீஸ் புகார் கொடுப்பதாக மிரட்டியதும், தான் ஒரு நீரிழிவு நோயாளி என்றும், தனது ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாகவும் அந்த பெண்மணி கூறுவதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. டிக்டாக் பயனர் ஒருவர் பதிவிட்ட இந்த வீடியோ மற்ற சமூக வலைதளங்களிலும் பரவி வைரலாகி வருகிறது. பலரும் அந்த பெண்மணியின் கோபம் குறித்து கிண்டலடித்து வருகின்றனர்.
Related Tags : America , Arkansas, McDonalds , late coffee, viral video, woman angry, அமெரிக்கா, அர்கான்சஸ், மெக்டோனால்டு, வைரல் வீடியோ, காபி பிரச்னை, பெண் கோபம்,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved