ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 53 க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த வாரத்தில்தான் ஷியா பிரிவினர் வழிபடும் மற்றொரு மசூதியில் பயங்கரவெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றிருந்தது. அதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அரசு தரப்பிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
தாக்குதல் நடைபெற்ற மசூதி, ஷைட் என்ற தரப்பினர் அதிகம் தொழுக வரும் மசூதியாக உள்ளது. இத்தரப்பினர் இஸ்லாமிய மாநில குழுவினரால் பலமுறை குறிவைக்கப்பட்ட இடமாகும். கடந்த வாரம் (கடந்த வெள்ளிக்கிழமை) ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தின் மசூதியில் தொழுகை நடைபெற்ற போது, அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியைப் பிடித்த பிறகு நிகழ்த்தப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்பட்டது.
தொடர்புடைய செய்தி: ஆப்கானில் குண்டுவெடிப்பு: 100 பேர் உயிரிழப்பு?
இதற்கு இஸ்லாமிய மாநில குழு பொறுப்பேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று கத்தாரின் தென் பகுதியில் மசூதியில் அதேபோலதொரு வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதுசார்ந்த விசாரணை நடந்துவருவதாக உள்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.