ஆய்வக உதவியாளர்களுக்கு 4 மாத ஊதியம் தராமல் பணியிலிருந்து விடுவிப்பு: ஓபிஎஸ் கண்டனம்

3 years ago 845

Dismiss-Without-paying-4-months-salary-to-temporary-laboratory-assistants--OPS-condemnation

கொரோனா முதல் அலையின்போது நியமிக்கப்பட்ட தற்காலிக ஆய்வக உதவியாளர்களை எவ்வித கால அவகாசமும் தராமல், உடனடியாக பணியிலிருந்து விடுவிப்பதும், நான்கு மாதங்களுக்கான ஊதியத்தை தராமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கொரோனா முதல் அலையின்போது 2020ஆம் ஆண்டில் வீடு வீடாக சென்று  மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் சுரக்கும் நீரை சேகரிக்கும் பணிக்காக தமிழகம் முழுவதும் தற்காலிக ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

image

இந்த நிலையில் திடீரென டிசம்பர் 1ஆம் தேதி முதல் பணிக்கு வர தேவையில்லை என்றும், மாத ஊதியமான 8 ஆயிரம் ரூபாயை நான்கு மாதங்களாக வழங்கவில்லை என்றும் ஆய்வக பணியாளர்கள் சென்னை மருத்துவ பணிகள் இயக்ககத்தின் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

கொரோனா முதல் அலையின்போது நியமிக்கப்பட்ட 1500 தற்காலிக ஆய்வக உதவியாளர்களை எவ்வித கால அவகாசமும் தராமல், உடனடியாக பணியிலிருந்து விடுவிப்பதும், நான்கு மாதங்களுக்கான ஊதியத்தை தராமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது. அவர்களது கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றவும், அவர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுத்திடுக” என தெரிவித்திருக்கிறார்

இதனைப்படிக்க...ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- காவல்துறை எச்சரிக்கை 

Read Entire Article