இங்கிலாந்து : நூதன முறையில் விளம்பரம் செய்து வரன் தேடிய நபர்!

2 years ago 848

UK-The-guy-who-advertises-in-a-Novel-way-and-looks-for-his-soulmate-life-partner-for-marriage

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காண்போரை ஆச்சரியப்பட செய்து வருகிறது ஒரு விளம்பரம். பில்போர்டு வகையில் மிகவும் பெரிதானதாக உள்ளது அந்த விளம்பரம். 29 வயது நிரம்பிய முகமது மாலிக் என்பவர் அந்த விளம்பரத்தை தனது சார்பாக வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர் பல நூறு பவுண்டுகளை (பிரிட்டன் கரன்சி) செலவு செய்துள்ளார். தனது வலைதளத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் இதனை செய்துள்ளார் அவர் என்பது தெரியவந்துள்ளது.

image

அதில் தனது தொழில் குறித்தோ, தனது வணிகம் குறித்தோ அவர் புரோமோஷன் செய்யவில்லை. மாறாக தனக்கு அந்த விளம்பர புரோமோஷன் மூலம் நூதன முறையில் வரன் தேடி வருகிறார். அவர் வைத்துள்ள விளம்பரத்தில் அவரது படம் மட்டுமே 20 அடிக்கு இடம் பெற்றுள்ளது. 

“என்னை அரேஞ்ச் மேரேஜில் (Arranged Marriage) இருந்து காப்பாற்றுங்கள்” என மெசேஜ் கொடுத்துள்ளார் மாலிக். அதோடு அந்த விளம்பரத்தில் www.findmalikawife.com என்ற வலைதள முகவரியையும் கொடுத்துள்ளார். 

image

அந்த வலைதளத்தில் தன்னை குறித்தும், தனது விருப்பம் குறித்தும் முழுவதுமாக விளக்கியுள்ளார். அதோடு தான் காமெடி செய்யவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் தனது வாழ்நாள் இணையரை தேடுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் விருப்பமுள்ளவர்கள் தனக்கு தெரியப்படுத்த கூகுள் ஃபார்ம்ஸ் ஒன்றையும் இணைத்துள்ளார் அவர். 

Read Entire Article