இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா பரவலின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்களும் பிரபலங்களும் பாதிப்படைந்து வருகின்றனர். சமீபத்தில், பாடகர் சோனு நிகாம், நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஷங்கரின் ‘ஈரம்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான தமன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். ஷங்கர் தற்போது இயக்கி வரும் ‘ராம் சரண் 15’, வம்சி பைடிப்பள்ளியின் ‘விஜய் 66’ படத்தில் தமன்தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கடைசியாக தமன் இசையில் சிம்புவின் ‘ஈஸ்வரன்’, விஷாலின் ‘எனிமி’ வெளியானது. தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.