இந்தியா-இலங்கை ராணுவம் கூட்டுப் பயிற்சி நிறைவு

3 years ago 812

இந்தியா, இலங்கை, ராணுவம், கூட்டுப் பயிற்சி, நிறைவு

கொழும்பு-இந்தியா மற்றும் இலங்கை ராணுவத்தின் 12 நாள் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது.

இந்தியா, இலங்கை ராணுவத்தினர் இடையே எட்டாவது கூட்டுப் பயிற்சி இலங்கையில் நடந்தது. கடந்த 4ம் தேதி துவங்கிய இந்த 12 நாள் கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள, நம் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

latest tamil news

இது குறித்து நம் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்த கூட்டுப் பயிற்சியில் நம் ராணுவத்தின் 120 வீரர்கள் பங்கேற்றனர். பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பான பயிற்சியில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபட்டனர்.இந்த பயிற்சி இரு நாட்டு ராணுவத்தின் திறமை, வீரர்களின் திறன்களை வெளிப்படுத்துவதாக இருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இது பெரிதும் உதவும். மேலும் இரு நாட்டுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதாகவும் இந்த பயிற்சி அமைந்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

சம்பத் குமார் 1). இலங்கை உடன் நமது மத்திய அரசு நல்ல முன்னேற்ற பாதையில் செல்கிறது.2). இலங்கைக்கு இந்தியாவுடன் நட்புறவை காட்டி சீனாவிடம் மறைமுக எச்சரிக்கை செய்கிறது.3). அதேசமயம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கைக்கு அழைத்து இலங்கை வாழ் முஸ்லிம்களை குஷி படுத்தி பாகிஸ்தானையும் குஷி படுத்துகிறது.4). நமக்கு அண்டை நாடுகள் பாகிஸ்தான், சீனா, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் மாலத்தீவு உள்ளன.5). இதில் பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் பங்களாதேஷ் போன்றவை நாம் தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும். இவர்களை நம்ப முடியாது.6). சீனாவுடன் நாம் நில எல்லை மற்றும் கடல் எல்லை மற்றும் பொருளாதார ரீதியில் தினமும் கண்காணிக்க வேண்டும்.10). இந்த எல்லா நாடுகளை விட இலங்கை மிகவும் அபாயகரமானது. சந்தேகத்துடன் உடைய கண்காணிப்பை தொடர் வேண்டும். எல்லா mandatory கண்காணிப்பு தேவை. இலங்கை புத்த மட துறவிகள் அரசியல் செய்பவர்கள். நம் தமிழ்நாட்டுக்கு தொன்றுதொட்டு தலைவலி தந்தவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. நன்றி ஐயா. ஹரி ஓம்.

Cancel

Sanny - sydney,ஆஸ்திரேலியா

Sanny இனி சீனாக்காரங்களுக்கு இவங்க எப்படி இந்திய இராணுவம் வகுப்பு எடுத்தது என்று சொல்லிக்கொடுப்பாங்க.

Cancel

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article