இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது. ஒமைக்ரான் பாதிப்பு 3,623-ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 5,90,611 பேராக அதிகரித்துள்ளது.
அதேபோல நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒமைக்ரான் தொற்றால் 3,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 27 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து 1,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.