திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் இன்று, 100 இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. பதினெட்டு வயதை கடந்த, 58 ஆயிரத்து, 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.திருப்பூர், மாநகராட்சி முதல் மண்டலத்தில் மாஸ்கோ நகர், இரண்டாவது மற்றும் மூன்றாவது மண்டலம் முறையே பாரதிநகர், பி.கே.ஆர்., காலனி, நான்காவது மண்டலத்தில் சின்னாண்டி பாளையம் ஆகிய இடங்களில் தலா, 1,500 கோவிஷீல்டு வீதம், 6,000 தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திருப்பூர் மருத்துவ கல்லுாரியில், 500 கோவிஷீல்டு, தாராபுரம், உடு மலை, அவிநாசி, பல்லடம், காங்கயம், ஊத்துக்குளி, ஜல்லிப்பட்டி, மடத்துக்குளம், கரடிவாவி அரசு மருத்துவமனைகளில் தலா, 100 வீதம், 900 தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷன் முகாமுக்கு, 3,000, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு, 3,000 மற்றும், 2,500 என, 8,500 தடுப்பூசி போடப்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள நல்லுார், 15 வேலம்பாளையம், தென்னம்பாளையம் (கே.வி.ஆர்., காலனி), டி.எஸ்.கே., காலனி, மண்ணரை, சுண்டமேடு, சூசையாபுரம், பெரியாண்டிபாளையம், பங்களா ஸ்டாப் (பி.ஆர்.எம்.எச்.,) நெசவாளர் காலனி, நெருப்பெரிச்சல், மேட்டுப்பாளையம், புதுராமகிருஷ்ணாபுரம் (எல்.ஆர்.ஜி.,), கோவில்வழி, குருவாயூரப்பன்நகர், அண்ணா நெசவாளர் காலனி ஆகிய 17 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா, 1,500 வீதம், 25 ஆயிரத்து, 500 'டோஸ்' செலுத்தப்பட உள்ளது.புறநகர பகுதிகள்பெருமாநல்லுார், மங்கலம், முதலிபாளையம், சேவூர், துலுக்கமுத்துார், நம்பியாம்பாளையம், திருமுருகன்பூண்டி, அவிநாசி, குன்னத்துார், வெள்ளிரவெளி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
பல்லடம்: செம்மிபாளையம், பூமலுார், புளியம்பட்டி, பல்லடம், உப்பிலிபாளையம் பகுதிகள்.
பொங்கலுார்: தொட்டம்பட்டி, கவுண்டன்புதுார் ஊ.ஒ., துவக்கப்பள்ளி, வெள்ளநத்தம் ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி.
வெள்ளகோவில்: சமுதாய நல கூடம், வெள்ளகோவில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், முத்துார், தென்நகரைபாளையம், ஓடையம், தண்ணீர்பந்தல்வலசு, கல்லிமடை ஊ.ஒ., துவக்கப்பள்ளிகள். மூலனுார், கன்னிவாடி, வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆயுதபூஜை விடுமுறையால் கடந்த இரு நாட்கள் முகாம் நடக்கவில்லை. இன்று நடக்கிறது. நாளை மெகா தடுப்பூசி முகாம் கிடையாது. தடுப்பூசி செலுத்தாதவர் இன்றே முகாமில் பங்கேற்று செலுத்தி கொள்ளலாம்,' என்றனர்.