இயக்குனரான மலையாள வாரிசு நடிகை
15 அக், 2021 - 13:30 IST
காவலன், தெய்வத்திருமகள், முகமூடி, மனிதன் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் மலையாள குணச்சித்திர நடிகரான கிருஷ்ணகுமார். இவருக்கு மொத்தம் நான்கு மகள்கள். இதில் மூத்த மகளான ஆஹானா கிருஷ்ணா என்பவர் தற்போது மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த 2018ல் வெளியாகி வரவேற்பை பெற்ற லூக்கா என்கிற படத்தில் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக சிறப்பாக நடித்து பாராட்டை பெற்றவர்.
இந்த நிலையில் இவர் தற்போது தோணல் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் வேலைகளை துவக்கிய ஆஹானா கிருஷ்ணா, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என அனைத்தையும் முடித்து, வரும் அக்டோபர் 30ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கு தயார் நிலையில் வைத்துள்ளார். இயக்குனரானதுடன் இந்த படத்தில் அவரே கதாநாயகியாகவும் நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. பொதுவாக நடிகைகள் இயக்குனர் ஆவது என்பது அரிதிலும் அரிதான விஷயமாக இருக்கும் நிலையில், இந்த இளம் வயதிலேயே இயக்குனர் ஆகியுள்ள ஆஹானா கிருஷ்ணா உண்மையிலேயே ஆச்சரியமானவர்தான்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- ராஜவம்சம்
- நடிகர் : சசிகுமார்
- நடிகை : நிக்கி கல்ராணி
- இயக்குனர் :கதிர்வேலு
- வெள்ளை யானை
- நடிகர் : சமுத்திரக்கனி
- நடிகை : ஆத்மியா
- இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா