உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி
16 அக், 2021 - 16:59 IST
கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆரி, ஷிவானி, மயில்சாமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். போனி கபூருடன் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ள படக்குழு, மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஹிந்தியில் 2019ல் வெளியாகி வரவேற்பை பெற்ற ‛ஆர்டிக்கிள் 15' படத்தின் ரீ-மேக்காக இந்த படம் உருவாகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் அவலநிலையை பற்றி இந்தப்படம் பேச உள்ளது. திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
Advertisement