ஹெல்த்
Published : 04,Nov 2021 09:02 AM
உலகளவில் சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோர் குறைந்து வருவதாக உலக பொருளாதார அவையின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக பொருளாதார அவை, இப்சோஸ் காலநிலை மாற்றம் மற்றும் நுகர்வோர் நடத்தை குறித்த கணக்கெடுப்பு, கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கிடையே 29 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. அதில், உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் கொரோனா தொற்று நோய்களின் போது நடத்தைகளை மாற்றி அமைத்துக் கொண்டதால் அவர்கள் சுற்றுச்சூழலில் அக்கறை காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தாங்கள் வாங்கும் அல்லது பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விசயங்களில் குறைந்த அக்கறையே காட்டியதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோரின் எண்ணிக்கை 12 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved