ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலை தலைமை தாங்க பெரும்பான்மை பலத்துடன் தேர்வான இந்தியா

3 years ago 721

UN, Human Rights Council, India, re-elected, ஐநா, மனித உரிமைகள் கவுன்சில், தலைமை தாங்கும் இந்தியா,

ஜெனிவா: ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் அங்கமாக விளங்கும் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் மூன்று ஆண்டுகளுக்கு தலைமை வகிக்கும். தற்போது பதவி வகிக்கும் இந்தியாவின் பதவிக்காலம் வரும் டிச.,31ம் தேதியோடு முடிவடைகிறது.

latest tamil news

இந்நிலையில், 2022 - 24ம் ஆண்டிற்கான ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஐ.நா., பொதுசபையில் நேற்று (அக்., 14) வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், இந்தியா பல்வேறு நாடுகளின் பெரும் ஆதரவுடன் மீண்டும் 6வது முறையாக தேர்ந்தெடுக்‍கப்பட்டு உள்ளது.

latest tamil news

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், '193 உறுப்பு நாடுகளில், தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க 184 நாடுகள் ஆதரவு அளித்து உள்ளன. 97 வாக்குகள் பெற்றாலே, தலைமை தாங்க முடியும் என்ற நிலையில் அதிகயளவு பெரும்பான்மை பலத்துடன் இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. உலக நாடுகள் இந்தியாவின் மீது வைத்திருக்‍கும் நம்பிக்‍கையை இது கட்டுகிறது. உலக அளவில் மனித உரிமைகளை நிலைநாட்ட இந்தியா எப்போதும் உறுதியாகப் போராடும்' என்றார்.

Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

M.COM.N.K.K. மிக்க மகிஷ்ச்சி அதிக நாடுகள் இந்தியா மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது இதுவே நமக்கு கிடைத்த வெற்றிதான்.என்றும் அஹிம்சையை பின்பற்றுவோம்.

Cancel

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article