ஒமைக்ரான் நீங்கள் நினைப்பதுபோல லேசானதல்ல; அதன்காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ''தடுப்பூசி செலுத்தியவர்களை பொறுத்தவரை டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரானின் தீவிரத்தன்மை குறைவு என எடுத்துக்கொண்டாலும், அதற்காக ஒமைக்ரானை அலட்சியமாக கருதிவிட முடியாது.
டெல்டாவை ஒப்பிடும்போது ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் முந்தைய மாறுபாடுகளைப்போலவே, ஒமைக்ரானால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் ஒமைக்ரான் வைரஸை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் மாறுபாடு பாதிக்கப்பட்டவர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய விளைவைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்வதால் சான்றுகள் இன்னும் வெளியிடப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.