சினிமா
Published : 14,Oct 2021 07:35 AM
ஆயுத பூஜையை முன்னிட்டு சசிக்குமார் - ஜோதிகா நடிப்பில் ‘உடன்பிறப்பே’ படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில், ‘கத்துக்குட்டி’ இயக்குநர் சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் ’உடன்பிறப்பே’. இதில் சசிகுமாரும் ஜோதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா - ஜோதிகா தனது வீட்டில் அமேசான் பிரைமில் ’உடன்பிறப்பே’ படம் பார்க்கும் புகைப்படத்தையும் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், இன்று தியேட்டர்களில் சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags : உடன்பிறப்பே, அமேசான் பிரைம், ஓடிடி, வெளியானது, ஜோதிகா, சூர்யா, சசிக்குமார், sasikumar, jyothika, udanpirappe, amazon prime, ott, release,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved