சினிமா
Published : 07,Jan 2022 03:44 PM
இயக்குநர் வசந்தபாலனின் ‘ஜெயில்’ இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘ஜெயில்’ கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையின் பூர்வகுடிகளை கண்ணகி நகருக்கு மாற்றிய அரசின் அதிகாரப்போக்கையே ‘ஜெயில்’ படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.
இந்த நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு படம் வெளியாகி 28 நாட்கள் ஆன நிலையில் இன்று சிம்ப்ளி செளத் ஓடிடி தளத்திலும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் ‘ஜெயில்’ வெளியாகியுள்ளது.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved