சினிமா
Published : 14,Oct 2021 09:39 PM
கர்நாடகாவில் பிரபல நடிகரின் திரைப்பட வெளியீடு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதால், அவரது ரசிகர்கள் திரையரங்குகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
தமிழில் நான் ஈ, புலி உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நடித்த 'சுதீப்' கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். இவரது நடிப்பில் இன்று வெளியாக இருந்த கோடிகொப்பா - 3 திரைப்படம் கடைசி நேரத்தில் வெளியாகவில்லை. நாளை வெள்ளியன்று வெளியாகும் என திரைப்படக் குழுவினர் அறிவித்தனர். அதனால் படத்தைப் பார்க்க திரையரங்குகளில் ஆவலுடன் திரண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் விஜயபுரா உள்ளிட்ட நகரங்களில் திரையரங்குகள் மீது கற்களை வீசித் தாக்கினர். திரையரங்க சொத்துக்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
கிராமத்தான குணமாத்தானே பாத்துருக்க.. கோவப்பட்டு பாத்ததில்லையே - மிரட்டும் அண்ணாத்த டீசர்
Related Tags : actor Sudeep, Kannada movie , movie release , release postponed , fans angry , நடிகர் சுதீப், கன்னட திரைப்படம், கோடிகொப்பா - 3, kotikobba - 3 , திரைப்பட வெளியீடு, திரைப்படம் ஒத்திவைப்பு,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved