சினிமா
Published : 16,Oct 2021 05:53 PM
கமல்ஹாசனின் ’விக்ரம்’ படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார் நடிகர் நரேன்.
’கைதி’ வெற்றிக்குப்பிறகு நடிகர் நரேன் ’குரல்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் படக்குழுவிற்கு பிரேக் விடப்பட்டது.
இதுவரை 25 சதவீத காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி ’விக்ரம்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில், இணைந்திருக்கிறார் நடிகர் நரேன். அவர் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்.
Related Tags : கமல்ஹாசன், விக்ரம், நரேன், லோகேஷ் கனகரான், படப்பிடிப்பு, vikram, lokesh kanagaraj, kamal haasan, shooting, narain,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved