கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! என்ன செய்தார் ப்ரியங்கா?
17 அக், 2021 - 09:57 IST
பிக்பாஸ் வீட்டில் திருடிய பிரபல விஜே ப்ரியங்காவை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று விஜயதசமி கொண்டாட்டத்திற்கான டாஸ்குகள் நடந்தது. இந்த டாஸ்கிற்காக ஸ்டோர் ரூமில் பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அனைத்து போட்டியாளர்களும் போட்டிக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் சென்றனர். அப்போது தனியாக நின்ற ப்ரியங்கா அங்கு இருக்கும் ஸ்வீட் பாக்ஸில் இருந்து ஸ்வீட்டை திருடி சாப்பிடுகிறார். இதை பார்த்துவிட்ட அபிநய்யும் ஸ்வீட்டை எடுத்து சாப்பிடுகிறார்.
பின்னர் அதை அப்படியே மூடி எதுவும் நடக்காதது போல் வெளியில் எடுத்து செல்கிறார் ப்ரியங்கா. ஆனால், அடுத்து உள்ளே அக்ஷரா நுழைந்து விட ஸ்வீட்டை வாயில் வைத்திருக்கும் ப்ரியங்கா திரும்பிக் கொண்டு சமாளிக்கிறார். அவரால் வாய் திறந்து பேச முடியாமல் பேசாமலேயே சமாளிக்க முயற்சிப்பதை பார்க்கும் போது நல்ல வேடிக்கையாக இருந்தது. இதற்கிடையே ஸ்வீட்டை திருடி தின்ற ப்ரியங்காவை நெட்டிசன் கும்பல் சரமாரியாக கமெண்டுகளில் வைத்து செய்து வருகின்றனர். ப்ரியங்காவிற்கு ரசகுல்லா திருடி என்ற பட்டப்பெயரையும் வைத்து விட்டனர். இப்படியாக இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர் சூட்டும் விழா இனிதே தொடங்கியுள்ளது.
Advertisement