காதலன், கணவரால் கொடூரமாக கொலை செய்யப்படும் பெண்கள்: பிரான்ஸில் அதிரிக்கும் குடும்ப வன்முறை

2 years ago 247

France-vows-action-on-femicide-after-3-more-women-killed-in-new-year-celebration

பிரான்ஸ் நாட்டில் பெண்கள் அவர்களது கணவர்கள், காதலர்களால் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளநிலையில், உறுதியான நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்கு எதிராக நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக அங்குள்ள பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் 100 பெண்கள் அவர்களது துணைகள் (கணவர்கள், காதலர்கள்) அல்லது முன்னாள் துணைகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புத்தாண்டு பிறந்த நேரத்தில் மட்டும் 3 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 44 வயது பெண்மணி ஒருவர், அவரது கணவரால் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல் 56 வயது பெண்மணி ஒருவர், தனது கணவரால் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளார்.

image

புத்தாண்டு நேரத்தில் 27 வயது பெண் ஒருவர் ராணுவ அதிகாரியான தனது காதலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, 113 பெண்கள் கடந்த வருடத்தில் மட்டும் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளநிலையில், பிரான்ஸ் நாட்டில் பெண்கள் இணைந்து வீதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டுக்கொள்ளாமல் அமைதியாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தீவிரமான போராட்டடங்களாக மாறியதை அடுத்து, குடும்ப வன்முறை கொலைகளை தடுப்பதற்காக, பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அவசர எண் வழங்கப்படுவதுடன், சுமார் 90,000 காவல்துறையினர் பெண்கள் அளிக்கும் புகார்களை கையாள்வதற்காக பயிற்சிப்பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read Entire Article