காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இளம் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை

3 years ago 752

Puthiyathalaimurai-logo

இந்தியா

15,Oct 2021 03:40 PM

Kashmir-encounter--Same-militants-suspected-as-2-more-Army-men-killed-in-Poonch

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுன்டரின்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இளம் ராணுவ அதிகாரி ஒருவரும் சிப்பாய் ஒருவரும் மரணம் அடைந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் மெந்தார் பகுதியில் மலையை ஒட்டிய வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்திருந்தது. அதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்திருந்தனர். பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் பகுதியை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், எதிர்த்தரப்பிலிருந்தும் பதில் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் இளம் ராணுவ அதிகாரி ஒருவரும், சிப்பாய் ஒருவரும் மரணம் அடைந்ததாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

தொடர்புடைய செய்தி: ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை

கடந்த வாரம் சுரான்கோட் பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில் ஒரு அதிகாரி உட்பட 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article