குறைந்தது, மழையால் கருவாடு வரத்து... கிலோ ரூ.50 வரை உயர்வு

3 years ago 712

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேக மூட்டத்துடன் அவ்வப்போது மழைபெய்து வருவதால் ராமேஸ்வரம், திருப்பாலைக்குடி, பாம்பன் பகுதியில் கருவாடு உற்பத்தி மற்றும் மீன்கள் வரத்து குறைந்துள்ளது.

இதனால் கருவாடு கிலோவிற்கு ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், திருப்பாலைக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து மீன்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே கடந்த சிலநாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. தொடர்ந்து அக். 16 வரை பலத்த காற்றுவீசும். மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்வது குறைந்துள்ளது. இதனால் மீன்கள் வரத்தும் குறைந்துள்ளதால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. உள்ளூரில் கிடைக்காததால் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலிருந்து கருவாடு ராமநாதபுரத்தில் விற்பனை வருகிறது. கிலோவிற்கு அதிகபட்சமாக ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது. வியாபாரிகள் கூறியதாவது:பொதுவாக புரட்டாசியில் கருவாடு, மீன் விற்பனை குறைந்து அவற்றின் விலையும் குறைந்துவிடும்.

ஆனால் இவ்வாண்டு மழை, புயல்காரணமாக கருவாடு உற்பத்தி, மீன்பிடி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கும் குறைந்த அளவே கருவாடு விற்பனைக்கு வருகிறது. பால் சுறா, ஷீலா கிலோ ரூ.800, நெத்திலி- ரூ.500, நகர, திருக்கை- -ரூ.300, குமுளா ரூ.200, கணவா- ரூ.250 என கருவாடு தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது,'என்றனர்.---

Advertisement

Read Entire Article