’குழந்தைகளால் என்னை சூழ்ந்த மகிழ்ச்சி’ - பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய நடிகர் யஷ்

2 years ago 456

Puthiyathalaimurai-logo

சினிமா

08,Jan 2022 05:32 PM

kgf-2-actor-Yash-celebrates-his-birthday-with-family

பிறந்தநாளை தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார் நடிகர் யஷ்.

இன்று தனது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் நடிகர் யஷ். இதனையொட்டி, ‘கேஜிஎஃப் 2’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு சிறப்பித்தது ‘கேஜிஎஃப் 2’ படக்குழு. சமூக வலைதளங்களில் யஷ் பிறந்தநாளை ட்ரெண்டிங்கில் தெறிக்கவிட்டுக்கொண்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். இந்த நிலையில், பிறந்தநாளை தனது மனைவியும் நடிகையுமான ராதிகா பண்டிட்டுடனும் குழந்தைகள் அய்ரா, யாதர்வுடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார் யஷ்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட் வெட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்து “பிறந்தநாட்கள் என்னை ஒருபோதும் உற்சாகப்படுத்தியதில்லை. ஆனால், குழந்தைகளால் என்னைச் சுற்றி மகிழ்ச்சி சூழந்திருப்பதைப் பார்க்கிறேன். உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதத்திற்காக ரசிகர்கர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். டேக் கேர்” என்று தெரிவித்துள்ளார்.

image

பிறந்தநாளையொட்டி தனது மனைவி பரிசளித்த ’கேஜிஎஃப்’ படத்தின் தீம் கேக், குழந்தைகள் பரிசளித்தக் கேக் என இரண்டு கேக்குகள் வெட்டும் புகைப்படத்தினை பகிர்ந்திருக்கிறார் யஷ். ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.

image

ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article