கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ சிறந்த படமாக தேர்வு

3 years ago 313

Kerala-State-Film-Awards-The-Great-Indian-Kitchen-wins-best-film

2020 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் மாநில திரைப்பட விருதுக்கு தேர்வாகியிருக்கிறது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.

கேரள அரசின் 2020 ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படமாக பாராட்டுக்களைக் குவித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தேர்வாகியிருக்கிறது. சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தென்னிந்திய ரசிகர்களிடம் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குநர் ஜியோ பேபி இயக்கிய, இப்படம் நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது அமேசான் பிரைமிலும் கிடைக்கிறது.

image

இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை பார்த்துவிட்டு உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

image

ஏற்கனவே, சீனாவில் நடந்த 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்பட்ட ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தற்போது , 51 வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுக்கு சிறந்த படமாக தேர்வாகியிருக்கிறது. அதேபோல், பிரித்விராஜ் - சச்சி நடித்த ‘அய்யப்பனும் கோஷியும்’ சிறந்த வெகுஜனப் படமாகவும் ‘கப்பெலா’ படத்தில் நடித்ததற்காக அன்னா பென் சிறந்த நடிகைக்கான விருதுக்கும் தேர்வாகியிருக்கிறார். அதேபோல, ‘வெல்லம்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் ஜெயசூர்யா சிறந்த நடிகராக தேர்வாகியிருக்கிறார். சிறந்த அறிமுக இயக்குநராக ‘கப்பெலா’ இயக்குநர் முஸ்தஃபா தேர்வாகியிருக்கிறார். 

Read Entire Article