கொசு மருந்தை குடித்ததால் சென்னையை சேர்ந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சோகம்

3 years ago 793

Chennai-Child-dead-after-drinking-All-Out-without-knowing-about-it

கொசுக்களை கொல்வதற்கு பயன்படுத்தப்படும் ‘ஆல் அவுட்’டை குடித்த சென்னையை சேர்ந்த 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தையடுத்த பம்மல் பாத்திமா நகர் வெள்ளச்சாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது 3 வயது குழந்தை கிஷோர். நேற்றிரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கிஷோர், ஆல் அவுட் கொசு மருத்தை தவறுதலாக குடித்திருக்கிறான். இதனை கண்ட பெற்றோர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து பின்னர் எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அங்கும் சென்றுள்ளனர். ஆனால் அங்கும் 3 வயது குழந்தை கிஷோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இதையும் படிங்க... தஞ்சாவூர்: பச்சிளம் குழந்தை மீட்பு - கண்ணீர் மல்க காலில் விழுந்து நன்றி தெரிவித்த பெற்றோர்

image

இச்சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். தாங்கள் முதலில் கொண்டு சென்ற தனியார் க்ளினிக் மருத்துவர் சுபாஷ் என்பவர் மீது, குழந்தை கிஷோரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மருத்துவர் சுபாஷ், வேறு ஒரு மருத்துவரின் பதிவு எண்ணை வைத்து மருத்துவர் தொழில் செய்து வருவதாக புகார் கூறியுள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் மருத்துவர் சுபாஷை தேடி வருகின்றனர். தற்போது அவர் நடத்தி வரும் சாய் கிளினிக் பூட்டப்பட்டுள்ளது.

Read Entire Article