கொரோனா காலத்திலும் அன்னிய முதலீடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பெருமிதம்

3 years ago 721

கொரோனா, அன்னிய முதலீடு, நிர்மலா பெருமிதம்

வாஷிங்டன் :''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளதால், கொரோனா காலத்திலும் அன்னிய நேரடி முதலீடு அதிக அளவில் குவிந்துள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
.நிவாரண நடவடிக்கை

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிர்மலா சீதாராமன், வாஷிங்டனில் உலக வங்கியின் வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:கொரோனா சவாலை இந்தியா துணிவுடன் சந்தித்து, பொருளாதார தாக்கத்தில் இருந்து மீட்சிப் பாதைக்கு மிக விரைவாக திரும்பி உள்ளது. இதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்த பொருளாதார நிவாரண நடவடிக்கைகளும், குறிப்பிடத்தக்க வகையில் மேற்கொண்ட நிலையான சீர்திருத்தங்களும் தான் காரணம். பல்வேறு துறைகளுக்கு 6 லட்சத்து 29 கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்கச் சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயம், குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு கடனுதவி, நலிவுற்ற பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், ராணுவம், காப்பீடு ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல் திட்டங்கள் வாயிலாக, கொரோனா பிரச்னையை முன்னேற்றத்திற்கு கிடைத்த வாய்ப்பாக இந்தியா பயன்படுத்தி வலிமையுடன் மீண்டு எழுந்துள்ளது. நேரடி முதலீடுஉலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும், 2020 - 21ம் நிதியாண்டில் சாதனை அளவாக 6 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது. கொரோனாவை சமாளித்தது மட்டுமின்றி, ஏழை நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கியதன் வாயிலாகவும், உலக நாடுகளின் பாராட்டுகளை இந்தியா பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஜேனட் எலனுடன் சந்திப்பு

அமெரிக்க - இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி ஒத்துழைப்பு கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எலன் ஆகியோர் பேசினர். இதையடுத்து, இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.அதில், சட்ட விரோத பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி உள்ளிட்ட நிதிக் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நிதி அமைச்சர்கள் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

Suri இவர் பதவியில் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பல மடங்கு கூடுதலாக கிடைச்சிருக்கும் .

Cancel

Tamilan இந்திய, உலக மக்கள் அனைவரும் முடங்கிகிடக்கும் நிலையில் , உலகளாவிய, இந்திய குண்டர்களின் ஆதிக்கம் மட்டும் தங்குதடைஇன்றி நடப்பதோடு மட்டுமல்லாமல் பன்மடங்கு பெருகிவிட்டது . நாட்டின் சொத்துக்கள் அந்நியர்களுக்கு அரசியல் சட்ட அரசுகளின் துணையோடு விற்கப்படுகிறது, மேலும் அடமானம் வைக்கப்படுகிறது .

Cancel

Kasimani Baskaran இந்தியா மீதுள்ள நம்பிக்கையை கெடுக்க பல நாடுகள் தீவிர முயற்சி எடுக்கும். அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு உள்நாட்டு ஆதரவு அதிகம். தேசவிரோதிகளை அடையாளம் கண்டு ஒழித்துக்கட்டுவதும் கூட ஊக்கத்துடன் செய்யவேண்டும்

Cancel

மேலும் 3 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article