சபரிமலை : சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
டிசம்பர், 31-ம் தேதி தொடங்கிய மகர ஜோதி சீசனில், சபரிமலைக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த சீசனில் எட்டு நாட்களில், 14.65 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 25.28 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல்லில், தேவசம்போர்டும், அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் இணைந்து, மகரஜோதி தரிசனத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பாண்டி தாவளம்,மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில், பக்தர்கள் அமர்ந்து ஜோதி தரிசனம் செய்வதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாண்டி தளத்தில் மட்டும் 8000 பேர் தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மகரஜோதி அன்று மட்டும், ஒன்றரை லட்சம் பக்தர்கள் சன்னிதானத்தில் இருப்பர் என்ற கணக்கின் அடிப்படையில், போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில், சபரிமலையில் மகர சங்கராந்தி பூஜை நடைபெறும்.இந்த ஆண்டு ஜன., 14 மதியம் 2:29 மணிக்கு இந்த பூஜை நடக்கிறது. அந்த நேரத்தில், திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டு, நேரடியாக ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் கூறியதாவது: ஜன., 14 அன்று மாலையில் நடைபெறும், மகரஜோதி தரிசனத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மகரஜோதிக்கு பின்னரும், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரலாம் என்பதால், அதற்கேற்ப அப்பம், அரவணை, பிரசாதம் தயாரிக்கவும், எருமேலி பேட்டை துள்ளலுக்கும், பந்தளம் திருவாபரணம் பவனிக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். எருமேலி பேட்டை துள்ளலுக்கு முன்னோடியாக, சந்தன குட பவனி இன்று இரவு எருமேலியில் நடக்கிறது.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.