சரக்கு கப்பல்களை கையாள மறுப்பு; அதானி குழுமத்தின் அறிவிப்புக்கு ஈரான் அதிருப்தி

3 years ago 734

புதுடில்லி-ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்கு கப்பல்களை கையாள மாட்டோம் என்ற அதானி குழுமத்தின் அறிவிப்புக்கு, ஈரான் அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

latest tamil news

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அதானி குழுமத்திற்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம் உள்ளது. இங்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதை பொருள் கடந்த மாதம் பிடிபட்டது. மேற்காசிய நாடான ஈரானில் இருந்து வந்த சரக்கு கப்பலில் இந்த போதை பொருள் சிக்கியது. இது, அதானி குழுமத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. இதையடுத்து, 'ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் கப்பல்களில் உள்ள சரக்குகள், அடுத்த மாதம் 15 முதல் முந்த்ரா துறைமுகத்தில் கையாளப்படாது' என, அதானி குழுமம் சமீபத்தில் அறிவித்தது.

இதற்கு, ஈரான் அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து டில்லியில் உள்ள ஈரானிய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு படைகள் ஆக்கிரமிப்பு, உள்நாட்டு போர், கடுமையான வறுமை உள்ளிட்ட காரணங்களால் அங்கு போதை பொருள் அதிகரித்தது. இது, ஈரானுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

latest tamil news

அவர்களால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.கடந்த 40 ஆண்டுகளாக வர்த்தகம் மற்றும் பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறோம். போதை பொருளுக்கு எதிராக ஈரான் தீவிரமாக போராடி வருகிறது. அதை அமெரிக்கா பாராட்டி உள்ளது. அப்படியிருக்கையில் எங்கள் சரக்கு கப்பல்களுக்கு தடை விதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

GMM உலக நாடுகள் அதானி குழுமத்திடம் இருந்து தொழில் தர்மத்தை கற்று கொள்ள வேண்டும். உலக நாடுகள் பல வறுமையில் வாழ்கின்றன. ஆனால், போதை பொருள் கடத்துவது இல்லை. பாக். ஆப்கான், ஈரானில் மட்டும் உற்பத்தி. நடமாட்டம். எப்படி? சரக்குகளை கையாள மறுப்பது சரியே.

Cancel

duruvasar இரானிலிருந்து வந்து இந்த மாதிரி விஷயங்களில் எந்த மாதிரியான அறிக்கை வெளியிடவேண்டும் என்பதை கற்க திமுக தலைவரிடம் படித்துவிட்டு போங்கள். இரானிலிருந்து போதை பொருள்களை கடத்தல் செய்யக்கூடாது என்று கடத்தல்காரர்களுக்கு அழுத்தம் கொடுப்போம். மற்றபடி இப்படி கடத்தப்படுவதற்க்கெதிராக ஒரு கண்டன தீர்மானத்தை உங்க நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றி ஐநாவுக்கு அனுப்பவேண்டும். இப்படி செய்தால் கடத்தலை ஒழித்துவிடலாம். உங்கள் கண்டன அறிக்கையை 27 நாடு ஜனாதிபதிகளுக்கு அனுப்பிவைக்கவேண்டும் இது மிக மிக முக்கியம்.

Cancel

VENKATASUBRAMANIAN நேர்மையாக தொழில் செய்பவர் போலும். இல்லையென்றால் நீ எதைவேண்டுமானாலும் கடத்திக்கொள் எனக்கு காசு வந்தால் போதும் என்று சொல்லியிருப்பார். எங்கே கூவின கம்யூனிஸ்ட்ஸ் காங்கிரஸ் RK கனகராஜ் எல்லோரும் காணாமல் போய் விட்டார்களா

Cancel

மேலும் 1 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article