நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி ‘கொலை’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கிறார். ’விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி கே குமார் இயக்கத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘கொலை’ என்று பெயரிட்டுள்ளனர்.
விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ’கர்ணன்’, ’சர்பட்டா பரம்பரை’ மற்றும் ’பரியேறும் பெருமாள்’ பணியாற்றிய செல்வா ஆர் கே படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘கொலை’ வரும் 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.