செக் போஸ்ட்..1

2 years ago 819

அலைகள் ஓயுமா?தமிழரின் பண்பாட்டு கலாசார பொங்கல் விழா, பொன்விளையும் நகரில் இவ்வாண்டு நடத்த வாய்ப்பே இல்லாமல், கொரோனா தொற்று மிரட்டி வருது. மக்கள் ஒன்று கூடி மகிழ முடியாமல் ஆக்கிடுச்சு. அவரவர் வீட்டிற்குள் தான் கொண்டாட வேணுமாம். கொரோனா தொற்று அலைகள் எப்போது தான் ஓயுமோ?கல்விக்கு ஆன்லைனே கதி!பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்று படிக்கணுமுன்னு விருப்பமா இருந்தாங்க.

குஷியாக வந்தாங்க. தொற்று தொல்லையால், மறுபடியும் அவர்களை ஆன்லைன் மூலமே படிக்க வேணும்னு உட்கார வச்சிடுச்சே.லேப் டாப் தருவதாக கல்லுாரிகளில், நகராட்சியில் அறிவிச்சாங்களே தவிர இன்னும் கூட மாணவர்களுக்கு வந்து சேரலையாம்.பாட நுால்கள் கூட இவ்வாண்டு மாணவர்களுக்கு கிடைத்த பாடில்லையாம். தரமான கல்விக்கு வழி பிறக்கலையே.கொரோனா தொற்று பெற்றோரின் வருமானத்தை பாதித்தது.

அது கூட வருத்தம் இல்லையாம். ஆனால் பிள்ளைகளின் படிப்பு பாழாவதை தான் ஜீரணிக்க முடியலையேன்னு வருந்துறாங்களாம்!எடுபடாத தீர்மானங்கள்!பழைய தீர்மானங்கள் நீண்ட உறக்கத்தில் இருக்கையில், புது புது தீர்மானத்துக்கு எப்போ வழி பிறக்குமோ. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப் போவதாக வேகமா முனிசி.,யில் முடிவு செஞ்சாங்க. இதற்கான ஏ.பி.சி., டெண்டர் கூட அறிவிக்கல.எல்லாமே வெறும் பேச்சுவாக்கில் இருந்தால் தெருநாய்கள் கட்டுப்படுமா. அமலுக்கு வராத திட்டங்கள் பற்றி விவாதிக்க தானா, நகராட்சி கூட்டமுன்னு பலரையும் கேட்க வச்சிருக்கு!

தொடர்கிறது மர்மம்!'பெமல்' தொழிற்சாலை அருகில், 2007ல் சட்டப்பிதா பவன் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாங்க. அதன் கல்வெட்டு பாழாகாமல் அதில் உள்ள எழுத்துகளை பாதுகாக்க பெயின்ட் பூசப்படுகிறது. இதுவரை கட்டடப்பணி துவங்க ஒரு செங்கல் கூட இறக்கப்படலை.ஆனால், 15 ஆண்டுகளாக முட்டுக்கட்டையாக ஏன் கிடக்கிறது என்பது மர்மமாகவே உள்ளது. சட்டப்பிதா பெயரில் உள்ள பூங்காவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 'பவன்' கட்டி முடிக்கும் வரை சும்மா வேடிக்கை பார்த்த கூட்டம், சட்ட சிக்கல் இருப்பதாக கூறி மூட வைச்சிட்டாங்க!

Advertisement

Read Entire Article