துபாய்-ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது.
ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. துபாயில் நடந்த பைனலில் தோனியின் சென்னை, மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மார்கன் பவுலிங் தேர்வு செய்தார்.
ருதுராஜ் நம்பிக்கை
சென்னை அணிக்கு ருதுராஜ், டுபிளசி ஜோடி வலுவான துவக்கம் கொடுத்தது. 'பவர் பிளே' ஓவர் (6) விக்கெட் இழப்பின்றி 50 ரன் எடுத்தது. பின் திடீரென ரன் வேகம் குறைந்தது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்சர் அடிக்க முயன்ற ருதுராஜ் (32), சுனில் நரைன் பந்தில் ஷிவம் மாவியிடம் 'கேட்ச்' கொடுத்தார். டுபிளசி 35 வது பந்தில் அரைசதம் கடக்க, சென்னை அணி 11.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது. உத்தப்பா 15 பந்தில் 31 ரன் எடுத்தார். கடைசி பந்தில் டுபிளசி (86) அவுட்டானார். சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ரன் குவித்தது. மொயீன் அலி (37) அவுட்டாகாமல் இருந்தார்.
வெங்கடேஷ் அரைசதம்
கடின இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஜோடி 10 ஓவரில் 88/0 ரன் எடுத்தது. 11வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர், அரைசதம் அடித்த வெங்கடேஷ் (50), ராணாவை (0) அவுட்டாக்கினார். சுனில் நரைன் (2) விரைவில் வெளியேறினார். சுப்மனும் (51) அவுட்டாக சென்னை பக்கம்
வெற்றி திரும்பியது.
தினேஷ் கார்த்திக் (9), சாகிப் (0), திரிபாதி (2), மார்கன் (4) என வரிசையாக ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். ஷிவம் மாவி (20) ஆறுதல் தந்தார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன் மட்டும் எடுத்து, தோல்வி அடைந்தது. பெர்குசன் (18) அவுட்டாகாமல் இருந்தார்.
Advertisement
வாசகர் கருத்து (8)
- புதியவை
- பழையவை
- அதிகம் விவாதிக்கப்பட்டவை
- மிக மிக தரமானவை
- மிக தரமானவை
- தரமானவை
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.