'ஜன்தன்' கணக்குகளில் 'டிபாசிட்' தொகை ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியது

2 years ago 616

Jan Dhan Account, PMJDY, Pradhan Mantri Jan Dhan Yojana,

புதுடில்லி : அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'ஜன்தன்' திட்டத்தின் கீழ், வங்கிக் கணக்குகளில் உள்ள 'டிபாசிட்' தொகை 1.5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கும் வகையில் ஜன்தன் திட்டம் 2014 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது.இதன்படி அனைத்து குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் ஒரு வங்கி கணக்கு துவக்கப்படும். அரசின் நேரடி மானிய திட்டங்கள் கீழான பலன்கள் இந்த வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகின்றன.

latest tamil news

மத்திய நிதி அமைச்சகத்தில் புள்ளி விபரங்களின்படி, 2021 டிச., 31ம் தேதி நிலவரப்படி நாடு முழுதும், 44.23 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளன. இந்த 44.23 கோடி கணக்குகளில் 34.9 கோடி கணக்குகள் பொதுத் துறை வங்கிகளிலும், 8.05 கோடி கணக்குகள் ஊரக வங்கிகளிலும், 1.28 கோடி கணக்குகள் தனியார் வங்கிகளிலும் துவக்கப்பட்டுள்ளன. இதில் 24.61 கோடி கணக்குகள் பெண்களின் பெயரில் உள்ளன. மேலும் 29.54 கோடி கணக்குகள் கிராமப் பகுதிகளில் துவக்கப்பட்டுள்ளன.

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ganesha இது தான் அரசாட்சி என்பது

Cancel

அறவோன் விண்ணோடும் முகிலோடும் விலைவாசி விளையாடாமல் இருந்திருந்தால், மக்களை வரிக்குதிரைகளாக ஆக்காமல் இருந்திருந்தால், பொருளாதாரம் உயர்ந்திருந்தால் இத்தொகை 600 - 700 லட்சம் கோடிகளை கடந்திருக்கும்

Cancel

mindum vasantham ithan makimai tamilarkalukku puriyavillai

Cancel

மேலும் 1 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article