ஜம்மு காஷ்மீர் : பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

3 years ago 533

Jammu-and-Kashmir-Terrorists-have-attacked-two-Civilians-who-hails-from-other-state-and-one-was-dead-in-this-brutal-attack

ஜம்மு காஷ்மீரில் இரு வேறு சம்பவங்களில் பயங்கரவாதிகள் வெளிமாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மற்றும் வியாபாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் ஸ்ரீநகர் பகுதியிலும், மற்றொன்று புல்வாமா பகுதியிலும் அரங்கேறி உள்ளது. 

image

கடந்த இரண்டு வாரங்களாக பயங்கரவாதிகள் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவது ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து வருகிறது. பீகார் மாநிலத்தை சேர்ந்த அரபிந்த் குமார் என்ற வியாபாரியை மாலை 6.40 மணி அளவில் பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொல்லி உள்ளனர். அவர் தாக்கப்பட்ட அதே இடத்தில் தான் ஒரு வாரத்திற்கு முன்னதாக பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியரை சுட்டுக் கொன்றுள்ளனர் பயங்கரவாதிகள். 

இதே போல புல்வாமா பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி சஹீர் அகமது என்பவரையும் தாக்கியுள்ளனர். அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவரும் உயிரிழந்தார். தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

இதற்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்கலாம் : 'கிரிக்'கெத்து 5: 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சினின் பேட் எழுதிய காவியம் 

Read Entire Article