”'ஜெய் பீம்’ 2021 ஆம் ஆண்டின் சிறந்தப் படம்” - புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி

2 years ago 1026

actress-Sai-Pallavi-laud-Suriya-Jai-Bhimrates-them-as-best-films-of-2021

நடிகை சாய் பல்லவி ‘சர்தார் உத்தம்’, ‘ஜெய் பீம்’ உள்ளிட்டப் படங்களைப் பாராட்டியிருக்கிறார்.

சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் கடைசியாக ‘பாவகதைகள்’ ஆந்தாலஜி படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், சாய் பல்லவி ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் கடந்த ஆண்டு கவனம் ஈர்த்த ‘சர்தார் உத்தம்’, ‘ஜெய் பீம்’ படங்களை பாராட்டியுள்ளார்.

“சர்தார் உத்தம் என்னை நெகிழ வைத்தது. சில நேரங்களுக்கு உலுக்கி எடுத்தது. உண்மையில் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் காட்டுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அன்று முழுக்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் காலத்தில் நடந்த அனைத்தையும் படத்தில் காட்டினார்கள். நான் பார்க்கும்போது விக்கி கெளஷலுடன் பயணித்த உணர்வு ஏற்பட்டது. மிக சிறப்பான படம்” என்றவர், ”‘ஜெய் பீம்’ 2021 ஆம் ஆண்டின் சிறந்த படம்” என்று பாராட்டியுள்ளார்.

image

ராணா டகுபதி, ப்ரியாமணி நடிக்கும் விராட பர்வம் படத்தில் சாய் பல்லவி அடுத்ததாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article