சினிமா
Published : 14,Oct 2021 10:56 AM
ப்ளூ சட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளூ சட்டை மாறன், ’ஆண்டி இந்தியன்’ படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ’ஆடுகளம்’ நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆதம் பாவா தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி வசனங்கள் கவனம் ஈர்த்தன. இந்த நிலையில், ‘ஆண்டி இந்தியன்’ படம் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved