டில்லியில் ஊரடங்கு இல்லை முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

2 years ago 772

புதுடில்லி-''கொரோனா பரவல் காரணமாக டில்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை,'' என முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது:டில்லியில் 24 மணி நேரத்தில் 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பாதிப்பு அதிகரிப்பது கவலைக்குரியது என்றாலும், மக்கள் அச்சம் அடைய தேவையில்லை.அவர்கள் முக கவசம் அணிவதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.பரவல் அதிகரிக்கிறது என்பதற்காக முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை.ஆனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.மத்திய அரசுடன் இணைந்து வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கடந்த ஆண்டு மே, 7ம் தேதி 20 ஆயிரம் பேர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர்; 341 பேர் பலியாயினர். கடந்த 24 மணி நேரத்தில் அதே எண்ணிக்கையில் பாதிப்பு பதிவாகி இருந்தாலும், ஏழு பேர் மட்டுமே இறந்துள்ளனர். தற்போது அதிக எண்ணிக்கையில் பரவல் இருந்தாலும், மிகச் சிலரே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. தனிமையில் இருந்த அவர், தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

Advertisement

Read Entire Article