தங்கவயல்--தங்கவயல் எஸ்.பி., ஆபிஸ் மூடும் திட்டத்தை தடுக்க வலியுறுத்தி, தங்கவயலிலிருந்து பெங்களூருக்கு பாதயாத்திரை சென்று, முதல்வரை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தங்கவயலில் 1832 முதல் எஸ்.பி., அலுவலகம் இயங்குகிறது. ஒரு மாவட்டத்தில் இரண்டு எஸ்.பி., அலுவலகம், இருந்து வருவது தங்கவயலில் மட்டுமே.தங்கவயலில் உள்ள 9காவல் நிலையங்களையும்கோலார் எஸ்.பி., அலுவலகத்துடன சேர்த்து விடுவதாக பல மாதங்களாகவேபுரளி இருந்து வருகிறது.சில நாட்களுக்கு முன், முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்த போதும் கூட அவர் மறுப்பு தெரிவித்தார்.இருந்த போதிலும், எஸ்.பி., அலுவலக பிரச்னை தொடர்பாகவும், போலீசாரை விஜயநகருக்கு மாற்றும் திட்டத்தை கைவிடும்படியும் வலியுறுத்தி தங்கவயலிலிருந்து பெங்களூருக்கு பாதயாத்திரையாக சென்று முதல்வரை சந்திக்க உள்ளோம்.இந்த பாதயாத்திரையில் தங்கவயல் காங்கிரசார், பொதுநல அமைப்பினர், உட்பட பலர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement