ஓவரா இருக்குது கட்டுப்பாடு!ஆயுதப்படை காக்கி காரர்கள் உட்பட 288 குடும்பங்கள் புதிய மாவட்டத்துக்கு இடம் மாற்ற உத்தரவு வந்திருப்பதால், வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பதால், தங்களை இடம் மாற்றம் செய்யாதீர்கள் என காக்கி காரர்கள் கோரி போராட வில்லை.ஆனால், அவரது குடும்ப பெண்கள் ஊர்வலமாக போனாங்க. மனு கொடுத்தாங்க. இது மீடியாவுல பத்திக் கிச்சு.காக்கி ஆபிசர்கள், காக்கி குடும்ப கண்ணீரை துடைக்க ஆக் ஷன் எடுக்குறாங்களோ இல்லையோ; ஆனால், அவர்களை போராட கூடாது. மீடியாவுல உங்கள் படமோ, செய்தியோ வர கூடாது. வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்னு 'டோஸ்' கொடுத்தாங்களாம்.இதனால் ச.ம.உ., குவாட்ரஸுக்கு வந்தபோது கூட அவர்களை சந்திக்க கும்பல் சேரல. இவங்களா போய் கேட்டபோது படம் எடுக்க அனுமதிக்கல. கட்டுப்பாடு ரொம்ப ஓவரா தான் இருக்குது.இடம் பெயர தயாராகும் புல்லு!ஒவ்வொரு கட்சியுமே அடுத்த சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு வேலையை வேகப்படுத்தி இருக்காங்க. ஆனால், புல்லுக்கட்டு கட்சியில் இன்னும் சுறு சுறுப்பு ஏற்படல.இவங்க மேலிடம், உள்ளூர்காரர்களை ஊக்குவிக்காமல் வெளியூர்காரர் ஒருவரை களத்தில் இறக்க தீவிரம் காட்டுவதால், புல்லுக்கட்டு செயல்வீரர்கள், மாத்தி யோசிக்கிறாங்களாம்.கை அல்லது பூ பக்கம் சாய உள்ளனர். ஏற்கனவே கிராமங்களில் பூ, கை கட்சி தான் பலமாக இருக்குதாம். அவர்களிடம் சிலரு தஞ்சம் அடையப் போறாங்களாம்.கடும்போட்டியில் சேர்மன்!கோல்டன் சிட்டியோட டெவலப்மெண்ட் அத்தாரிட்டி சேர்மன் பதவிக்கு கடும் போட்டி நடந்து வருது. இதில சிட்டி தலைவர், மாவட்ட து.த., பொதுச்செயலர் ஆகிய மும்மூர்த்திகள் ஸ்டேட் ஹெட் ஆபிஸ் முதல் டில்லி வரை 'லாபி' நடத்தி வராங்க.சேர்மன் பதவிக்கு 'மாஜி' பூக்காரர் சிபாரிசில் ஒருவரும்; மற்ற இருவர் செங்கோட்டை முனியையும் நம்பி இருக்காங்க. ஆனால், மூன்று பேருமே தமக்கு தான் கிடைக்க போகுதுன்னு சொல்ல முடியாமல் இருக்காங்க.மாநில கட்சித் தலைமை யாருக்கு ஆதரவாக இருக்குதுன்னு புரிஞ்சிக்க முடியலியாம்.
Advertisement