தடுப்பூசி செலுத்தும் பணியையே செய்வதால் அடுத்த கட்டம் செல்ல முடியவில்லை - மா.சுப்ரமணியன்

2 years ago 342

The-next-stage-could-not-go-on-because-the-vaccine-was-doing-the-job-itself-says-ma-subramaniyan

நீண்ட நாட்களாக தடுப்பூசி போடும் பணியையே செய்து கொண்டிருப்பதால் அடுத்த கட்டத்திற்கு போக முடியாமல் இருக்கிறது என்றும், செவிலியர்கள் தங்கள் கஷ்டத்தை தாங்கிக்கொண்டு, விரைவில் தடுப்பூசி போட்டு முடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம், டெங்கு சிறப்பு முகாம், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருவதாக கூறிய அவர், தடுப்பூசி முகாம்களோடு, மழைக்கால மருத்துவ முகாம்களை நடத்த முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்களோடு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

image

இந்நிலையில் இன்றைய தினம் 9வது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை 10வது தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்கள் 75 லட்சம் பேர் உள்ளனர். அதில் 72 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

அதேபோல் 74% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 36% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணியையே செய்து கொண்டிருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாம் போக முடியாமல் இருக்கிறது. எனவே சகோதரிகளாக உள்ள செவிலியர்கள் தங்கள் கஷ்டத்தை தாங்கிக்கொண்டு, விரைவில் தடுப்பூசி போட்டு முடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி ஒரு சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைவாக உள்ளதால், அங்கு பணி செய்பவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், ஆனால் இவ்விவகாரத்தினால் அவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும் எண்ணம் இல்லை. நவம்பர் இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் என்கிற இலக்கை எட்ட வேண்டும் என்று பணி செய்து வருகிறோம். ஆனால் மத்திய அரசும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது 18-45 வயதுடைய இளம் தலைமுறையினர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமா என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது. கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

Read Entire Article