உலகம்,சினிமா
Published : 07,Jan 2022 11:07 AM
ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரே மேன்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் நெட்பிளிக்ஸில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள், அடுத்ததாக ‘தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றனர். இந்தப் படத்தை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
‘தி கிரே மேன்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன், கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தை வரும் ஜூலை மாதம் வெளியிட, நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
#TheGrayMan planning for July 2022 release on NETFLIX. pic.twitter.com/BWsgiHegde — LetsOTT GLOBAL (@LetsOTT) January 7, 2022
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved