சினிமா
Published : 14,Oct 2021 01:07 PM
மலையாளத்தில் வெளியான நயன்தாராவின் ’நிழல்’ த்ரில்லர் படம் தமிழில் விரைவில் ‘மாய நிழல்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை நாளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார்.
பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் ’நிழல்’ நயன்தாரா நடித்த ‘நிழல்’ கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. த்ரில்லர் படமான இதில் நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார். ஏற்கனவெ, குஞ்சாக்கோ போபனுடன் ’ட்வென்டி 20’ படத்தில் சிறிய வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் குஞ்சாக்கோ போபனுடன் நயன்தாரா இணைந்த ’நிழல்’மலையாளத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. விரைவில் ‘மாய நிழல்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது. இதன், தமிழ் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு நாளை வெளியிடுகிறார். எதில், வெளியாகிறது என்று இன்னும் அறிவிக்கவில்லை.
Related Tags : நயன்தாரா, நிழல், மாய நிழல், மலையாள படம், டப்பிங், தமிழ் சினிமா, nizhal, malayalam, nayanthara, dubbing, malayala movie,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved