தர்மதுரை 2ம் பாகம்: தயாரிப்பாளர் அறிவிப்பு
15 அக், 2021 - 14:20 IST
விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் தர்மதுரை. சீனு ராமசாமி இயக்கி இருந்தார். தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் இசை அமைத்திருந்தார்.
தற்போது வெற்றி பெற்ற படங்களின் 2ம் பாக சீசன். அரண்மணை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்தியன், ரஜினி முருகன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் வரிசையில் தர்மதுரை இரண்டாவது பாகமும் தயாராக இருக்கிறது. இதனை ஆர்.கே.சுரேஷ் தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனை யார் இயக்கவுள்ளார், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரத்தை ஆர்.கே.சுரேஷ் வெளியிடவில்லை. விஜய் சேதுபதிக்கு பதிலாக ஆர்.கே.சுரேஷே நடிக்கலாம் என்றும் சீனு ராமசாமி இயக்கலாம் என்றும் தெரிகிறது.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- ராஜவம்சம்
- நடிகர் : சசிகுமார்
- நடிகை : நிக்கி கல்ராணி
- இயக்குனர் :கதிர்வேலு
- வெள்ளை யானை
- நடிகர் : சமுத்திரக்கனி
- நடிகை : ஆத்மியா
- இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா