சினிமா
Published : 06,Jan 2022 09:14 PM
பிரபல தெலுங்கு சினிமா நடிகர் மகேஷ்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் வீட்டுத் தனிமையில் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மகேஷ்பாபு பதிவிட்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்யவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இவர் ஸ்பைடர், மகேஷ் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
pic.twitter.com/PN7oR9GrUT — Mahesh Babu (@urstrulyMahesh) January 6, 2022
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமைக்ரான் திரிபு பரவல் காரணமாக நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொங்கலுக்கு வெளியாக இருந்த திரைப்பட வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Related Tags : இந்தியா, தமிழ்நாடு, கொரோனா, உலகம், INDIA, FILM, MOVIE, STAR, TN, AP, WORLD, COVID19, TELANGANA, TAMIL NADU, தெலுங்கானா, ஆந்திரா, மகேஷ் பாபு, Mahesh Babu,
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved