இந்தியா
Published : 07,Jan 2022 07:27 PM
புதன்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது, ஃபெரோஸ்பூர்-மோகா தேசிய நெடுஞ்சாலையை மறித்து, பாதுகாப்பு மீறலுக்கு வழிவகுத்ததாக அடையாளம் தெரியாத 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து குல்கர்கி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பீர்பால் சிங் எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். "முக்கியமான வழக்கின் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று எங்களிடம் அறிவுறுத்தல்கள் உள்ளன. இவ்விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது, யாரும் கைது செய்யப்படவில்லை ” என்று கூறினார்.
அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், புதன்கிழமை மாலை பாரதி கிசான் யூனியனின் (கிராந்திகாரி) நிர்வாகிகள் பிரதமரின் கன்வாயை முற்றுகையிட்டதற்கு பொறுப்பேற்றனர்.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved